Skip to main content

புனிதசிலுவை கல்லூரி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கு கூட்டம்! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

திருச்சி புனிதசிலுவை கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ‘பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு, சவால்கள், தீர்கள்’ என்ற தலைப்பின்கீழ் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்றுடன் நிறைவடைந்த மாநில அளவிலான கருத்தரங்கில் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து ஒடுக்கப்பட்ட நகா்புறக் குழுமங்களின் தகவல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் வனேசாபீட்டா் சிறப்புரையாற்றினார். 

 

அதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இந்தியப் பிரிவை சோ்ந்த ஷின்டோ ஜேம்ஸ் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அதன் பிரச்சனைகள் குறித்து பேசினார். அடுத்ததாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பு மாநில அழைப்பாளா் ஆண்ட்ரூ சேசுராஜ் பேசுகையில், குழந்தைகள் பாதுகாப்பில் உள்ள சவால்கள் குறித்து சிறப்புரையாற்றினார். அவரைத்தொடர்ந்து பேசிய குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் உஷா நந்தினி பேசுகையில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்வுகளையும், நடைமுறைகளையும் குறித்து சிறப்புரையாற்றினார். 


இந்நிகழ்வில் சமூகப்பணித்துறை பேராசிரியா்கள் டெய்சிராணி மற்றும் முதன்மை ஒருங்கிணைப்பாளா்கள், 150க்கும் மேற்பட்ட சமூகப் பணித்துறை மாணவ, மாணவிகள் உள்ளிட்டவா்களும், சமூக நிறுவனங்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா். இந்த மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்