State-level karate competition in Chidambaram

Advertisment

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலைக்கல்லூரியில் பேராக் ஒகினாவா கோஜ்ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நேற்று(12.2.2025) நடைபெற்றது. போட்டிக்கு ராகவேந்திரா கல்லூரியின் தாளாளர் பாபு தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் முன்னிலை வகுத்தார். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் வி. ரெங்கநாதன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் தமிழ்நாடு ஊழல் தடுப்பு இயக்கம் தலைவர் ஜெகசண்முகம், ஆகியோர் கலந்துகொண்டு கருப்பு பெல்ட் தகுதியில் வெற்றிபெற்ற அபிநாஸ்ரீ, மதுலியா, சாருலதா, கவுசிகா, லக்ஷனா, பவன்குமார், தனுஷ், தரகேஷ், கர்சிராம். சுஜித், லெனி, ஜோஸ் லியோ, ஆண்டோ ஹரிஷ், பாரதி பிரியா, சனி திஸ், குகநாத், பிரவீன், கமலேஷ்வரன், ஜெகன், ஸ்ரீதரன் உள்ளிட்ட மாணவர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கி தற்காப்பு கலைகளை கால தேவைக்கு ஏற்ப கற்றுக்கொள்வது எவ்வாறு பயன் உள்ளதாக இருக்கும் என்று மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், பாண்டிச்சேரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கு பெற்றனர். கராத்தே பயிற்சியாளர் இளவரசன், பிரீத்தி யூனன், ஷர்மா, ரவிக்குமார், சத்தியமூர்த்தி, சிகாமணி கிஷோர், ராமலிங்கம், முத்துராஜ், ஆசிரியை ஜெயப்பிரியா, முருகன், சிவரஞ்சனி, மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஷர்மா நன்றி கூறினார்.