துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோய்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உறவினர்களும் அரசு மருத்துவமனையில் உள்ளனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
அவர்களுக்கும் உணவு, வெந்நீர் மற்றும் உடைகள் கிடைக்கமால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சுற்று பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பால், ரொட்டி, பழம் கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர். மேலும் வீடுகளுக்கு சென்று பொருட்கள் எடுத்து வர பஸ் வசதி இல்லாததால் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது.