/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3254.jpg)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான குமரி அனந்தன் (93) காலமானார். குமரி அனந்தன் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த்குமாரின் சகோதரும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும் ஆவார். சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனிற்றி நள்ளிரவு 12:30 மணிக்கு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நான்காம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குமரி அனந்தன் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நாடாளுமன்ற எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. குமரி ஆனந்தன் மறைவுக்கு பேரவையில் சபாநாயகர் அப்பா இரங்கல் குறிப்பு வாசித்து அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3255.jpg)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் 'தகைசால் தமிழர் விருது வழங்கிய போது வாஞ்சையோடு உறவாடிய குமரி அனந்தன் நினைவு கண்ணீரை பெருக்குகிறது. ஏராளமான நூல்களையும் மேடைகளையும் கண்ட குமரி அனந்தன் அவரது தமிழால் நம் நெஞ்சங்கள் என்றும் நிறைந்து இருப்பார். தமிழே தன் மூச்சென வாழ்ந்த குமரியான தடை இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்' என தெரிவித்துள்ளார்.மேலும் நேரில் சென்றும்குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)