thiruchy

Advertisment

திருச்சி அருகே காவலர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதி வழங்க வேண்டும் என்று மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நேற்று இரவு தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரால் தாக்கப்பட்டு 3 மாத கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அந்த காவல் ஆய்வாளரை கைது செய்தது வரவேற்க்கதக்கது. அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துயரத்தில் இருக்கும் உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கூறினார்.