தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளன. இதில் மூத்த மகன் ராஜ்மோகன் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசித்து வருகிறார். ராஜ்மோகன் முழு நேர அரசியல்வாதியாகவும், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜ்மோகனின் மனைவி விமலா தேவி கடந்த இரண்டு மாதங்களாக உடல் நல குறைவால், மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென நேற்று (03.12.2019) இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/daughter in lae3_0.jpg)
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விமலாதேவி இறந்தார்.மனைவி விமலாதேவி திடீரென இறந்ததை கண்டு ராஜ்மோகனும் அவரது மகன்களான தீரஸ். டானும் கதறித் துடித்தனர்.
இந்த தகவல் அமைச்சர் சீனிவாசனுக்கு தெரியவே மனம் நொந்துபோய் கண்கலங்கி விட்டார். உடனே மகனுக்கும், பேரன்களுக்கும் ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து உறவினர்களும், கட்சிக்காரர்களும் எதிர்க்கட்சியினரும், நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களும் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம். காலனியில் இருக்கும் ராஜ்மோகன் இல்லத்திற்கு வந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
Follow Us