ADVERTISEMENT

மாநிலங்களவைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க.வில் நீடிக்கும் இழுபறி!  

11:25 AM May 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அ.தி.மு.க.வில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு வரும் ஜூன் 10- ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. நான்கு இடங்களை ஆளும் தி.மு.க. கூட்டணி பெறும் நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓர் இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் இரண்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம் என்ற நிலையில், கட்சியின் உயர்நிலைக் கூட்டம், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தென் தமிழகத்திற்கு இம்முறை முக்கியத்துவம் தர வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், சமுதாய அடிப்படையிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், குரல்கள் எழுந்துள்ளனர்.

இந்த நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை இறுதி செய்ய தயாராக இருந்தாலும், தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் இறுதிச் செய்யாமல் உள்ளதால் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT