தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (16.12.2019) மாலை 05.00 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வரிசையில் காத்திருந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றன. மேலும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப்படி 2011- ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.