Skip to main content

"விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு தேர்தல்" - மாநில தேர்தல் ஆணையர்

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.10 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டத்தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன என்றார்.

 

State election Commissioner Palanisamy press meet

 



இதைத்தொடர்ந்து, ஊரக உள்ளாட்சி தேர்தல் நூற்றுக்கு நூறு சதவீதம் எந்த வித முறைகேடுகளும் இன்றி நேர்மையாக நடத்தப்பட்டது. அது மட்டும் இல்லாமல் திமுக அளித்த புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது. விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை தாங்கள் ஏற்க முடியாது. வாக்காளர் பட்டியலை நாங்கள் தயாரிக்கவில்லை என்று கூறிய அவர்,  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பார்கள் என்று தெரிவித்தார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பாடாமல் நடந்து முடிந்த பதவியேற்பு விழா!

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

கதச


தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா மார்ச் 2 ஆம் தேதி காலை நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 29 கவுன்சிலர்களும், மஜ்லீஸ் கட்சியின் ஒரு கவுன்சிலர், சுயேட்சை கவுன்சிலர்கள் 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். 

 

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த 26 வார்டு உறுப்பினர்களை, திமுக நகர செயலாளர் சாரதிகுமார் சொகுசு பேருந்தில் அழைத்து வந்து பதவி பிரமாணம் எடுக்கவைத்தார். பின்னர் மீண்டும் சொகுசு பேருந்தில் பத்திரமாக அழைத்து சென்றார்.

 

வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு தலைமையில் பதவி  பிரமாணம் செய்த நிலையில் நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்தாய் வாழ்த்தும் நிகழ்ச்சி முடியும் போது தேசிய கீதமும் பாடாமல் பதவியேற்பு விழா நடந்து முடிவடைந்தது. இது பொதுமக்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்தாய் வாழ்த்து பாடாதது குறித்து மஜ்லீஸ் கட்சியின் 19 வார்டு உறுப்பினர் நபீலா வக்கீல் அகமது, நகராட்சி ஆணையாளரிடம் இதுக்குறித்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார். 

 

அரசு நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதத்தை புறக்கணித்த நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரல்கள் மக்களிடம் உருவாகி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 

Next Story

பதவியேற்பில் பாடல்! அனைத்து தரப்பு எதிர்ப்பையும் வாங்கிய அதிமுக கவுன்சிலர்! 

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப். 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

 

அதில், மொத்தம் உள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று 3,843 நகராட்சி வார்டுகளில் 18 வார்டுகளிலும், 7,621 பேரூராட்சி வார்டுகளில் 196 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

 

இந்நிலையில், இன்று வென்ற கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சிகளின் கமிஷனர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் செய்தனர்.

 

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமி‌ஷனர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் வென்ற கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் 35 வினாடிகள் கொண்ட உறுதிமொழியை தனித்தனியாக எடுத்துக்கொண்டு பொறுப்பேற்றார்கள்

 

அப்படி உறுதிமொழி ஏற்றபோது, சென்னை 193வது வார்டு அதிமுக கவுன்சிலர், ‘பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.. துணிவு வர வேண்டும் தோழா..’ என்ற பாடல் பாடினார். இதற்கு மற்ற அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.