Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பகுதிகளில் மது விற்கத் தடை!

LOCAL BODY ELECTION TASMAC CLOSED STATE ELECTION COMMISSION ORDER

Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானங்களை விற்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று (30/09/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 06/10/2021 மற்றும் 09/10/2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் 09/10/2021 அன்றுஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளதால் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 04/10/2021 அன்று காலை 10.00 மணி முதல் 06/10/2021 நள்ளிரவு 12.00 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 07/10/2021 அன்று காலை 10.00 மணி முதல் 09/10/2021 நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12/10/2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுப்பானக் கடைகள் மூடியிருக்கஉரிய ஆணைகள் வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அரசைக் கேட்டுக்கொண்டதன்படி, மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடம் ஆகியவற்றை மூடுவதற்கு அரசாணை எண் 35, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நாள் 27/09/2021- ல் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்களை விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது என்றும், மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு மாநில தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

local body election State Election Commission
இதையும் படியுங்கள்
Subscribe