சட்டவிதிகள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றித்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

State Election Commission

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, டிசம்பர் 30 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில்மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தொகுதி மறுவரையறை பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் முறையாக சட்ட விதிகளின்படியே நடத்தப்படுவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.