/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athlete-trichy-1.jpg)
மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை நடைபெற்றது. மாநில தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குத் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கும் விழா நேற்று (15.12.2021) அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.
மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் 166 புள்ளிகளுடன் 8 தங்கம், 11 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, திருச்சி மாவட்ட தடகள சங்க ஜுனியர் தடகள வீரர்கள் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athlete-trichy-2.jpg)
பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஆப்பிள் மில்லட் வீரசக்தி, திருச்சி மாவட்ட தடகள சங்கச் செயலாளர் டி. ராஜூ தலைமையில், தடகள சங்கப் பொருளாளர் சி. ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், பயிற்சியாளர் பிரான்ஸ் சகாயராஜ் ஆகியோர் முன்னிலையில் கெளரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பிரபுஆகியோர் கலந்துகொண்டு தடகள வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)