தமிழகத்தில் வாரம்தோறும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை 'மெகாதடுப்பூசி முகாம்' ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மூன்றாம் கட்டமாககரோனாதடுப்பூசி முகாம் தற்போது தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளைப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் இருபதாயிரம் முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக நடக்க இருக்கும் இந்த தடுப்பூசி முகாமில்,கோவிட்ஷீல்டு,கோவாக்சின்தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. முதல் முகாமிலேயே 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என வைக்கப்பட்டிருக்க இலக்கை தாண்டி28 லட்சம்பேருக்குத்தடுப்பூசி போடப்பட்டிருந்தது.இதற்குத்தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்திருந்தார். இரண்டாவது முகாமில் 15 லட்சம் பேருக்குகரோனாதடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டநிலையில், 16.43 லட்சம்பேருக்குத்தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்கியிருக்கும் முகாமில் 15 லட்சம்பேருக்குத்தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.