ADVERTISEMENT

தொடங்கியது நீட்... நீண்ட சோதனைகளுக்கு பிறகு தேர்வுமையங்களுக்குள் மாணவர்கள் அனுமதி

12:33 PM May 05, 2019 | kalaimohan

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தேர்வு மையத்திற்குள் அனுப்பும் பணி தொடங்கியது.

ADVERTISEMENT

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது. 15 லட்சம் மாணவ மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

ADVERTISEMENT

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உட்பட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டுகளில் காலையில் நீட் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் வெளி ஊரிலிருந்து வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று சேர்வதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு மற்றும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் பிற்பகல் 12 மணிக்கு தொடர்புடைய தேர்வு மையங்களுக்கு வந்துவிடவேண்டும். பிற்பகல் 1 மணிக்கு கேட் மூடப்படும்.

தேர்வு மையத்துக்கு நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஹால்டிக்கெட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவிட்ட பாஸ்போர்ட் புகைப்படம் சுய அடையாள ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.

தேர்வு எழுத பால்பாயிண்ட் பேனா 1 தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோமெட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் அனுமதி கிடையாது.

மொபைல் போன், ப்ளூடூத், பென்டிரைவ், கைகடிகாரம், கை கேமரா, காதணி, வளையல் இது போன்ற ஆபரணங்களுக்கும் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை.

நீரிழிவு நோயுள்ள தேர்வர்கள் மாத்திரைகள், பழங்கள் வெளியில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை எடுத்து வரலாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட், சாண்ட்விச் உள்ளிட்டவற்றை எடுத்து வர அனுமதி இல்லை.

மென்மையான நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய அனுமதி உண்டு. முழுக்கைச் சட்டை அணியக்கூடாது.

கலாச்சாரம் சார்ந்த உடைகள் அணிந்து வருபவர்கள் 12 மணிக்கு முன்பே தேர்வறைக்கு சோதனைக்காக வரவேண்டும். மூடப்பட்ட தனி அறையில் அவர்களுக்கு சோதனை நடத்தப்படும் தேர்வு மையத்துக்குள் காலணிகள் அணியக்கூடாது. செருப்பு மட்டும் அணியலாம் உயர்ந்த குதி உயர்ந்த செருப்புகளை அணியக் கூடாது.

தேர்வு முடிவதற்கு முன்பு யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை. தேர்வு முழுவதும் சிசிடிவி கேமரா மூலமும் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படும். தேர்வு மையத்தில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தேர்வு மையத்திற்குள் அனுப்பும் பணி தொடங்கியது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT