
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கோட்டாா் சவோியாா் பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கான திருக்கொடியேற்றம் இன்று மாலை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் வழித்தோன்றல்களில் ஒருவரான புனித சவோியார் கோட்டார் பகுதிக்கு வந்து இங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் இணைந்து சாதி, மத பேதமின்றி மக்களின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஒன்றாகி வாழ்ந்தார்.
இந்த நிலையில் அவர் மறைந்த பிறகு கோட்டாரில் அவருக்கு பேராலயம் கட்டப்பட்டது. அதன் பிறகு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் ஒவ்வொரு நாள் விழாவையும் சாதி, மதம் இல்லாமல் ஒவ்வொரு தரப்பினரும் ஏற்று நடத்துவார்கள். அப்போது பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதேபோல் 9 வது நாள் நடக்கும் தேர்பவனி மிகவும் முக்கியமானதாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் அரசின் வழிமுறை நெறி காட்டுதலின் படி திருவிழா நடத்தப்படுவதாகப் பேராலய நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆண்டு திருப்பலிகள் மட்டும் நடக்கும் என்றும் கலை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறாது என்று அறிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)