ADVERTISEMENT

கருப்பில் ஆரம்பித்து வண்ணமயமாக முடிந்தது காலா- காலா படம்பார்த்த தமிழிசை மகிழ்ச்சி

06:00 PM Jun 07, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

தமிழகத்தில் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்துவந்த காலா திரைப்படம் இன்று வெளியானது. காலா ரஜினியின் அரசியல் வருகையை அறிவித்தற்கு பிறகு வரும் முதல் படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுவந்தது. தற்போது காலா படம் இன்று வெளியானதை தொடர்ந்து பாஜக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காலா படத்தை இன்று தனது சகோதரகளுடன் திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் தியேட்டர் வாயிலிலேயே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது

ADVERTISEMENT

கிளீன் இந்தியா திட்டத்தை விமர்சித்த மாதிரி இருக்கிறதாக சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல திரைப்படத்தையும் எதார்த்த உண்மையையும் இணைத்து பார்ப்பதால் பிரிவினைதான் வரும். நான் ஒன்றை மட்டும்தான் கவனித்தேன் கருப்பில் ஆரம்பித்து இறுதியில் வண்ணமையமாக முடிந்தது அதேபோல் எல்லோர் வாழ்க்கையும் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை


.

அரசியல் வேறு திரைப்படம் வேறு அவர் ஒரு நடிகராக இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். அதேபோல் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவர் அரசியல் பேசுவது அவரது சொந்த கருத்து. அதேபோல் அவர் நடிகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. இப்போது மட்டுலமல்ல இதற்கு முன் வந்த நிறைய ரஜினி படங்களில் அரசியல் கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கிறது அதனால் அதையெல்லம் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

எனக்கு காதல் கதைகள் ஆடல்,பாடல் போன்றவை உள்ள கதைகளை விட சமூக அக்கறை கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் எனவே இந்த படம் சமூக கருத்துகொண்ட படம் என்று கேள்விப்பட்டேன் அதனால் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த திரைப்படத்திற்கு வந்தேன்.

யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். அரசியல்வாதிகள் மக்களை இயக்கி கொண்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித் அரசியல்வாதி என்று கூறுவது அவருடைய சொந்த கருத்து என்னை பொறுத்தமட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். நான் ஒரு அரசியல்வாதி என்ற முறையில் எல்லோரும் என் துறைக்கு வர ஆசைப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சிதான் எனக்கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT