ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவரால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை முழுதும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், வட சென்னை சொல்லவே தேவையில்லை.மழையினாலும் உடைமைகளை இழந்தது மட்டுமல்லாமல்,நீரினாலும் உடல் நிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் வட சென்னை பகுதியில் இருந்து ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், அல்ட்ரா ஸ்கேன்எடுத்துட்டுவாங்க என அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர், ஸ்கேன் எடுப்பதற்காக சென்றபோது அங்கிருந்த ரேடியாலஜி பாடப்பிரிவில் பி.ஜி படிக்கும் மாணவர் கோகுலகிருஷ்ணன் பணியில் இருந்துள்ளார். அவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அவரின் கணவருடன் சென்று மருத்துவமனை டீனிடம் புகார் கூறியுள்ளார். புகாரை பெற்ற டீன் அந்த பயிற்சி மருத்துவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், கோகுலகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.