'Stand of the Tamil government is firm'-Duraimurugan interview in Delhi

கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரைத்தர முடியாது;மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதையடுத்து காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவரது இல்லத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான நீரைக் கர்நாடகா விரைந்து திறந்து விட அறிவுறுத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லையென்றால் டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.

nn

Advertisment

தொடர்ந்து டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தியுள்ளேன். தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை வழங்கிடுமாறு உத்தரவிட வலியுறுத்தினோம். ஜூலை வரை வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவும் கேட்டுக் கொண்டோம். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியானது'' என்றார்.