புதுச்சேரி சிறப்பு காவல் பிரிவிற்கு மேலை நகரங்களில் விற்பனை செய்யப்படும் ரசாயன ஸ்டாம்ப் போதைப் பொருள் புதுச்சேரியின் நகர பகுதிகளில் விற்பனை செயப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகையில் புதுச்சேரி லாஸ்பேட்டை வள்ளலார் நகர் பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சென்று வருவது அறியப்பட்டு அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Advertisment

equal

அப்போது லாஸ்பேட்டை வள்ளலார் நகர் பகுதியை சார்ந்த அருண் என்கிற பயோ செமிஸ்டரி படித்த இளைஞர் ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள் (Lysergiv Acid Diethylamide ) ஸ்டாம்ப்களை வைத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதன் மதிப்பு ஒன்று 1,500 ரூபாய் என்றும் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அருணை கைது செய்து மேலும் விசாரித்தில் பெங்களூர் பகுதியில் இதனை வாங்கி வந்து இங்கே வரும் வெளிநாட்டு, வெளிமாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதை ஒப்பு கொண்டுள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 ஆயிரம் மதிப்பிலானா ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறும்போது இந்த ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள் தடை செய்யப்பட்டது என்றும், இதன் மதிப்பு அதிகம் என்பதால் வெளி மாநில மற்றும் வெளிநாட்டினர் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், இதன் போதையானது 8 மணி முதல் 12 மணிவரை இருப்பதால் இது கொஹைன் , அபினை விட அதிக வீரியமானது என்றும் தெரிவித்தனர்.