முன்னாள் முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமானகலைஞரின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் துரைமுருகன்,டி.ஆர்.பாலு, கனிமொழி,உதயநிதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகளும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த அமைதி ஊர்வலத்தில் கரோனாகாரணமாக குறைவான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடம் வரை அமைதி ஊர்வலமாக சென்றனர்.அதனை அடுத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்திலும்,அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.