மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் கருத்து தேவையில்லை என்ற கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், தமிழக கர்நாடக மக்களின் நல்லுறவை கருதி மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ள அவர்,
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் மீண்டும் கர்நாடகா அனுமதி கோரியிருப்பது மிகவும் ஆபத்தானது. தமிழகத்திற்கு காவிரி நீர் உரிமையை பறிப்பதைகர்நாடகா வஞ்சகச் சூழ்ச்சியாக கொண்டிருப்பதும் கவலையளிக்கிறது. இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவிற்குகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அணுகுமுறை பயனளிக்காது. மேகதாதுவில்அணை கட்ட அனுமதி கோரிய கர்நாடக அரசின் அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.