Advertisment

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டமும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் சுமார் 27 முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் முகாமில் தங்கி இருக்கும் மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார்.

இதற்கு முன்னால் நீலகிரியில் மழையால்பாதிக்கப்பட்ட பலஇடங்களை அவர் பார்வையிட்டார்.

Advertisment