
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைகாக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் (வயது 63) நுரையீரல் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மதுரை தனியார் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ''ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவால் வேதனை அடைந்தேன். எம்.எல்.ஏவாக சட்டமன்றத்திற்குள் செல்லவேண்டிய மாதவராவின் மறைவு பேரிழப்பு. பொதுவாழ்வில் உள்ளோர் முன்னெச்சரிக்கையுடன் இருந்து தடுப்பூசி போட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
Follow Us