திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மே 19 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரங்களைதொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.