Advertisment

ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு உண்மை தான்! தங்கத் தமிழ்ச்செல்வன் பகீர் பேட்டி!!

காற்றாலை மின்சாரம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு உண்மை தான் என தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார்.

Advertisment

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழககொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்அப்போது செய்தியாளர்களிடன் பேசுகையில்,

Advertisment

ammk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காற்றாலை மின்சாரம் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தங்கத் தமிழ்ச்செல்வனோ. ஒருநாளின் மின்சாரத்தேவை 16 ஆயிரம் மெகாவாட். ஆனால், வெறும் 5000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத்தை எப்படி உற்பத்தி செய்யலாம் என்று பார்ப்பதை விட்டுவிட்டு தனியாரிடம் அதிக தொகை கொடுத்து மின்சாரம் வாங்குகிறார்கள். நிச்சயம் அதில் முறைகேடுகள் நடந்திருக்கும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்றார்.

மேலும் அவர் பேசும் போது.. எட்டுவழிச் சாலை அவசியம் இல்லை அதோடு வனத்துறையும் அனுமதி கொடுக்காது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை - மல்லபுரம் மலைச்சாலை மற்றும் கிழவன்கோவில் - காமராஜபுரம் மலைச்சாலைத் திட்டத்திற்கு வெறும் இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கவே பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, சென்னை சேலம் சாலையை விட்டுவிட்டு சென்னை முதல் கன்னியாகுமரிவரையுள்ள சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றலாம். மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்றவர் அதிமுக கட்சி அழிவுப் பாதையில் செல்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கூறியது பற்றி கேள்வி எழுப்பிய போது, இதைத்தான் நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூறிக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார். உடன் மாவட்ட.நகர. ஒன்றிய பொருப்பாளர்கள் பலரும் இருந்தனர்.

thangamani stalin dmk admk ammk Thanga Tamil Selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe