Published on 01/02/2021 | Edited on 01/02/2021

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுமார் 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்தப் பட்ஜெட் உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "தமிழகத்தை ஆறு ஆண்டுகளாகப் புறக்கணித்த மத்திய அரசு, தேர்தலுக்காக மெகா திட்டங்களை நிறைவேற்றப் போவதாகப் போக்கு மட்டும் காட்டியிருக்கிறது; நிவாரண நிதி இல்லை; எட்டுவழிச்சாலையை நிறைவேற்றியே தீருவோம் என்னும் நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாய லாலிபாப்" என்று அவர் தெரிவித்துள்ளார்.