/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaiko stalin.jpg)
மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். வலது தொடையில் இருந்த நீர்க்கட்டிய அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் அவர் வீடு திரும்புவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அப்பல்லோ சென்று ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர், ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Follow Us