ADVERTISEMENT

மோடி கூறியதை வரவேற்கிறேன்... ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின்  

08:31 PM Jun 19, 2020 | kalaimohan

ADVERTISEMENT

லடாக் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி மூலமாக அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ். பங்கேற்றுள்ளார். திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, பிஜூ ஜனதா தளம் சார்பில் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்த காணொலி ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மையை பாதுகாக்க பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைளுக்கு திமுக துணை நிற்கும். எல்லையில் உயிர் நீத்த தமிழக வீரர் பழனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் இரங்கல். போர் குரல் ஒலிக்கும்போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக முன்சென்று இந்திய நாட்டின் பெருமையை நிலை நாட்டுவோம். இந்தியா அமைதியை விரும்புகிறது என பிரதமர் மோடி கூறியதை திமுக சார்பில் நான் வரவேற்கிறேன் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT