முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

am

Advertisment

அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் வி.பி.கலைராஜன். பின்னர், அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்தவிபி கலைராஜன் அமமுகவில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

Advertisment

amm

இவர் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அமமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், வி.பி.கலைராஜன் இன்று திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ss