திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் விவகாரம், உள்ளாட்சி துறை ஊழல் குறித்து பேச தடை விதிக்கவேண்டுமென அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
இன்று அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்வது வாடிக்கைதான் எனக்கூறி ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது, என கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.