style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
2021 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.திமுக தலைவர் ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் அல்லது இந்த ஆட்சியே இல்லமால் சட்டமன்ற தேர்தல் நடக்க வேண்டும் என அவசரம் காட்டுகிறார். இப்படி நிறைவேறாத ஆசைகள்தான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அவர் தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் விரும்பமாட்டார்கள். ஏனெனில் எம்.எல்.ஏ பதவியை பெற்ற எவரும் தனது கடமையை 5 ஆண்டுகள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது இப்போது பேஷன் ஆகிவிட்டது. வேறு எதுவும் கிடைக்காததால் இப்படி ஒரு குற்றசாட்டைசுமத்தி வருகிறார்கள். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க திகில் சீன்ஸ்,த்ரில் சீன்ஸ் எல்லாம் வரும். இதைப்போல்பல கைவந்தகலைகளை எதிர்க்கட்சியினர் வைத்துள்ளனர் என்றார்.