பாஜகவை வீழ்த்த மாநிலக்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்!!- ஸ்டாலின்

 State parties want to bring the BJP down! - Stalin

மாநில சுயாட்சியை பறிக்கும்பாஜகவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நேற்று ராகுல்காந்தி மற்றும் சரத்பவார், பரூக் அப்துல்லா போன்ற முக்கிய தலைவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ''தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்!''

மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

stalin
இதையும் படியுங்கள்
Subscribe