/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin crt.jpg)
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த அவர், கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற உடன் தனது உதவியாளராக கலைஞர் அவரை நியமித்துக் கொண்டார். கலைஞரின் நிழல் என்று திமுகவினரால் அழைக்கப்பட்ட அவரது மறைவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கலைஞரின் மனநிலை அறிந்து அவர் கூறும் முன்னரே அவர் நினைக்கும் காரியத்தைத்திறம்பட முடிக்கும் ஆற்றல் அவருக்கு அதிகம் உண்டு. இதனைப் பல மேடைகளில் கலைஞர் அவர்களே நேரடியாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரை நேரடியாக சந்தித்து உடல்நலம் விசாரித்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் இயற்கை எய்தியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சல் செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)