Advertisment

கண் திறந்து பார்த்த கலைஞரிடம் பேசும் ஸ்டாலின்! புகைப்படம் வெளியீடு

ra ka

கலைஞர் கண் திறந்து பார்க்கும் நிலையில் அவருடன் ஸ்டாலின் பேசும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் வருகையின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

kk ra

திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் குறைந்து காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவர் 24 மணி நேரமும் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

Advertisment

கலைஞர் நலம் பெற்று வர வேண்டும் என்று மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்து ‘தலைவா எழுந்து வா’ என்று தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். தமிழகமெங்கிலும் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் கலைஞர் நலம் பெற கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றன.திருக்குவளை மற்றும் திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் கலைஞர் நலம் பெற வேண்டி கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்களூம் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

venkaiya

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வந்து கலைஞரை தீவிர சிகிச்சைப்பிரிவுக்கே சென்று பார்த்தார். அப்புகைப்படம் வெளியிடப்பட்டது. கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்புகைப்படம் உணர்த்தியது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலைஞரை நேரில் பார்த்தார். அப்போது கலைஞர் கண் விழித்து பார்த்ததும், கலைஞரின் காதில் சென்று ஸ்டாலின் பேசும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

karunanithi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe