காரை நிறுத்திய ஸ்டாலின் - ஓடி வந்த விவசாயிகள்

mk

mkj

திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைந்ததை பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து திருக்குவளைக்கு புறப்பட்டார். தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி வழியாக சென்ற அவர், வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் பேசுவதற்காக காரை நிறுத்தி இறங்கினார். திருக்குவளைக்கு 3 கி.மீ. முன்பு உள்ள எட்டுக்குடி முருகன் கோவில் முன்பு உள்ள வயல் பகுதிதான் அது.

வந்திருப்பது ஸ்டாலின் என்பதை அறிந்த வயலில் வேலை செய்த பெண்கள் அவரிடம் பேசுவதற்காக ஓடோடி வந்தனர். நெருங்கி வந்த அவர்களை பார்த்து வணக்கம் வைத்த ஸ்டாலின், நல்லா இருக்கீங்களா? என்றதும், அவர்களும் நல்லா இருக்கோங்க, உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம். திடீர்ன்னு பாக்குறோம் சந்தோஷமாக இருக்கு என்றனர். சிறிது நேரம் அவர்களிடம் பேசிய ஸ்டாலின், பின்னர் புறப்பட்டு திருக்குவளைக்கு புறப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

kalaingar thirukkuvalai
இதையும் படியுங்கள்
Subscribe