இதுக்கூட தெரியாம...ஸ்டாலின் பேசுகிறார்: ஓ.எஸ்.மணியன் தாக்கு!

os

தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிர்கட்சிகளே இல்லாத நிலை உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாகை மாவட்டம் சீர்காழியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மேட்டூர் அணை 80 அடியை எட்டினால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்க முடியும். இதுக்கூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

அதிமுகவிற்கு போட்டிக்கட்சி என்று சொன்னால் அது திமுக ஒன்று தான். தற்போது திமுகவும் எங்களுக்கு போட்டியில்லை என்று சொல்லும் அளவிற்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தனித்து வென்றுகாட்டியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

admk Os Manian
இதையும் படியுங்கள்
Subscribe