ADVERTISEMENT

மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின்!

12:36 PM Mar 15, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதேபோல் நேற்று முன்தினம் (13.03.2021) திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது.

இதன் காரணமாக சில வாரங்களாக பிரச்சாரத்தை ஒத்திவைத்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 15) மாலை திருவாரூரில் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். திருவாரூரில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT