தமிழகத்தில் நடக்கும் ஊழலை மட்டும் பிரதமர் அலுவலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆன்லைன் டெண்டரில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை என முதல்வர் பேசிய 24 மணி நேரத்தில் சென்னை ஸ்மார்ட்டி சிட்டி டெண்டரில் 180 கோடி ரூபாய் முறைகேடு குறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் நடக்கும் ஊழலை மட்டும் பிரதமர் அலுவலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.