தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் ஸ்டாலின் உட்பட திமுக வின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் "குடம் இங்கே..தண்ணீர் எங்கே..?" என எழுதப்பட்ட காலி குடத்துடன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். தண்ணீர் பிரச்சனைக்கு உடனடியாக தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.