ADVERTISEMENT

வேட்பாளர் பட்டியலுடன் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை!

10:41 AM Mar 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் (10.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

பின்னர் நேற்று மாலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியடப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இன்று (12.03.2021) காலை 10 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அறிவிப்புகளுக்குப் பின்னரும் வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வரும் நிலையில், எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என உட்சபட்ச எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள் உள்ளனர். இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞரின் படத்திற்கு முன் வைத்து மரியாதையை செலுத்தினார். அதன்பின் அண்ணா,. கலைஞர் நினைவிடமுள்ள மெரினாவிற்குச் சென்று அங்கும் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11 மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT