வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், 173 தொகுதிகளில் திமுகபோட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் (10.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும்ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

பின்னர் நேற்று மாலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியடப்படும்என தகவல்கள் வெளியாகியநிலையில், தற்போது இன்று (12.03.2021) காலை 10 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.பல்வேறு அறிவிப்புகளுக்குப் பின்னரும்வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வரும் நிலையில், எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என உட்சபட்ச எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள் உள்ளனர். இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின்இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞரின்படத்திற்கு முன் வைத்து மரியாதையைசெலுத்தினார்.அதன்பின் அண்ணா,. கலைஞர் நினைவிடமுள்ள மெரினாவிற்குச் சென்று அங்கும் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மரியாதைசெலுத்தினார். அதன்பிறகுதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11 மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment