இன்று (14.04.2021) டாக்டர் அம்பேத்கரின் 130வதுபிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கார்'' என புகழாரம் சூட்டினார்.
அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சென்னைசைதாப்பேட்டையில் அரசு எம்.சி.ராஜா மாணவர் விடுதி வளாகத்தில் உள்ளஅம்பேத்கரின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/drytretre.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/fgdfgdf.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/srfere.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/gfchdgfyhdgf_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dfhgdfhgdf_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/yfurtur_0.jpg)