Published on 27/04/2021 | Edited on 27/04/2021

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (16/04/2021) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விவேக் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாது மரம் நடுதல் உள்ளிட்ட சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்ததால் அவரது மறைவின் போது தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும், இளைஞர்கள், பொதுமக்கள் தரப்பிலும் மரங்கள் நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் இல்லத்தில் அவரது குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.