Advertisment

கோவை திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை!!!

Stalin to meeting Day after tomorrow with DMK executives

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைதான திமுகவினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர்ஸ்டாலின் அறிக்கை வாயிலாகவலியுறுத்தியிருந்தார்

Advertisment

மேலும் அந்த அறிக்கையில்,கைது செய்யப்பட்ட திமுகவினர் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். கரோனாகாலத்தில் போராட்டம் வேண்டாம் என்றால் கோவையில் நடப்பது பொறுமையை சோதிப்பதாக உள்ளது.தன்னை கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் இருக்கிறார் அமைச்சர் வேலுமணி. இதே போக்கு தொடர்ந்தால் ஊழலை பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தை கோவையில் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில்கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் திமுக தலைவர் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைகூட்டம் நிர்வாகிகளுடன் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த கோவை திமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆலோசனையில்அமைச்சர் வேலுமணிக்கு எதிராக போராடிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்ததுகுறித்து ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

meetings velumani admk minister stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe