Stalin, Khushboo nominations accepted

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.நேற்று (19.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றநிலையில், நேற்று 3 மணியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.இதுவரை வேட்புமனுதாக்கல் செய்தோரின் எண்ணிக்கை4,500-ஐ கடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 4,567பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 திருநங்கைகள் ஆகியோர்வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 70 பேர் மனுதாக்கல்செய்துள்ளனர்.

Advertisment

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தற்பொழுது தொடங்கியது. தேர்தல் அதிகாரிகள் மனுக்களைப் பரிசீலிக்க உள்ளனர்.வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனின்மனு ஏற்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. காட்பாடியில் போட்டியிடும்திமுக துரைமுருகனின்வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.