ஜெ. அன்பழகன் உடல்நலம் குறித்து ஸ்டாலின் நலம் விசாரிப்பு...

Stalin's welfare on health of J.Anbhazhagan's

தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்டசெயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணபொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இதனையடுத்து, ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளையொட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 2ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

61 வயதான அன்பழகன், கடந்த 2ஆம் தேதியன்று கரோனா மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல்நலம் குறித்துநேரில் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

corona virus stalin
இதையும் படியுங்கள்
Subscribe