Advertisment

கரூர் செல்லும் ஸ்டாலின்... வரவேற்க காத்திருக்கும் செந்தில்பாலாஜி!

dmk

Advertisment

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பின் கீழ், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை நடத்திவருகிறதுதிமுக.முதல்கட்டப் பிரச்சாரத்தை திமுக இளைஞரணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்து வருகிறார்.

அவரைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்.அதன் ஒரு பகுதியாக, இன்று (03.01.2021) கரூர் மாவட்டம், கரூர் கிழக்கு ஒன்றியம், வாங்கல், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

காலை 11:30 மணிக்கு நொய்யல் குறுக்குச் சாலையில்தன்னுடைய முதல் பிரச்சாரத்தை துவங்கி, திருக்காம்புலியூர் பைபாஸ் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கிறார். ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் 3 மணிக்கு கரூர் பேருந்து நிலையத்தில் துவங்கி, வெங்கமேடு அண்ணா சிலை பகுதியில்பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து வாங்கல், குப்பிச்சிபாளையம் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடையே'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பின் கீழ், கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார். அதன் பிறகு, மாலை 5 மணிக்கு மேல், திருமாநிலையூர், காந்திகிராமம்,புலியூர்கடைவீதி, கிருஷ்ணராயபுரம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, மாலை 6 மணிக்கு மேல் இறுதியாகக் குளித்தலை பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

ஒவ்வொரு பகுதிகளிலும் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க, சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி,பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறார் எனச் சொல்லப்படுகிறது.

senthilbalaji karur stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe