Stalin with election statement ... Tribute at kalaingar memorial ...

Advertisment

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், 173 தொகுதிகளில் திமுகபோட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் வேட்பாளர் பட்டியலை திமுகதலைவர் ஸ்டாலின் வாசித்தார். திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில்,எப்போது திமுக தேர்தல் அறிக்கை வெளியாகும் என உட்சபட்ச எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள் உள்ளனர். தற்பொழுதுஅண்ணா, கலைஞர் நினைவிடமுள்ள மெரினாவிற்குச் சென்று அங்கும்தேர்தல் அறிக்கையை வைத்து திமுக தலைவர் மரியாதைசெலுத்தினார். எனவே இன்று மதியம் 12 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையைஸ்டாலின் வெளியிடுவார்என எதிர்பார்க்கப்படுகிறது.