ADVERTISEMENT

இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதரவு கொடுங்கள்! தேனி ஊராட்சி சபை கூட்டத்தில் திமுகவினர் வலியுறுத்தல்! 

03:31 PM Jan 12, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தேனி மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கம்பம் ராமகிருஷ்ணன், ஓபிஎஸ் தொகுதியான தேனி ஒன்றியத்திலுள்ள அரண்மனை புதூர். கொடுவிலார்பட்டி. நாகலாபுரம். உப்பார்பட்டி. தப்புக்கொண்டு, காட்டுநாயக்கன்பட்டி என எட்டு ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.

தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் விவசாயிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு எங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை, கழிப்பறை போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. பெயருக்குத்தான் துணை முதல்வர் தொகுதியாக இருக்கிறது. நீங்கள்தான் எங்கள் கோரிக்கைகளை கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் எனக் கூறி தாங்கள் கொண்டு வந்த மனுக்களை எல்லாம் கம்பம் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.

அதுபோல் ஒவ்வொரு ஊரிலும் 25க்கும் மேற்பட்ட முதியோர்கள் உதவித்தொகை கிடைக்காமலும் அதை வாங்கி கொடுக்க கோரியும் மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட கம்பம் ராமகிருஷ்ணனோ, உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருந்தால் அந்தந்த பகுதியில் உள்ள தலைவரிடமும், வார்டு மெம்பர்கள் மூலமும் உங்கள் குறைகளை சொல்லி நிவர்த்தி செய்து இருக்கலாம்.

அதனாலதான் தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை நடத்த சொல்லி வலியுறுத்தி வருகிறார். அப்படி இருந்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்த அரசு முன்வரவில்லை என்பதால் தான் ஊராட்சி சபை கூட்டத்தை போட்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சொல்லி இருக்கிறார்.

அதன் அடிப்படையில்தான் நாங்கள் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். தற்பொழுது நீங்கள் கொடுக்கப்பட்ட மனுக்களை எல்லாம் நானே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உங்கள் குறைகளை நிவர்த்தி செய்கிறேன் என்று உறுதி அளித்தார்.

அதன்பின் மாவட்ட பொறுப்பாளரான கம்பம் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளரான சக்கரவர்த்தி உள்பட பொறுப்பில் உள்ள சில உபிகளும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கும். வீடுகளுக்கும் சென்று மக்களை சந்தித்து ஊராட்சி சபையின் பிட் நோட்டீஸ்களை கொடுத்து உங்களுடைய கோரிக்கை எல்லாம் கூடிய விரைவில் ஸ்டாலின் முதல்வராக வந்தவுடன் நிறைவேற்றி கொடுப்பார்.

இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதரவு கொடுங்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு நீங்கள் வாக்களிப்பதின் மூலம் தான் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி, அதன்மூலம் உள்ளாட்சி தேர்தலும் நடக்கும் உங்கள் கோரிக்கைகளும் குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என வாக்காளர்களிடம் ஊராட்சி சபைக்கூட்டம் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT