Advertisment

'அவர் அரசியல் பாடம் படிக்காதவர்' - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம்!

 Stalin did not study the political lesson - Minister OS Maniyan interview!

Advertisment

'புரெவி' புயல் காரணமாகதமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கடலூரில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது, வெள்ளச் சேதத்தைசமாளிப்பதில் அ.தி.மு.கதவறிவிட்டது. சென்னையில், முன்பு ஏற்பட்ட வெள்ளச் சேதத்திலும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நாகையில்செய்தியாளர்களைச் சந்தித்தகைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், முதல்வர் கூறியதைப் போல் ரஜினி முதலில் அரசியல் கட்சியைப் பதிவு செய்யட்டும்,அவரது கொள்கைகளைச் சொல்லட்டும். பின்னர், அதைப் பற்றி பேசுவோம்என்றார். அதேபோல், ஸ்டாலினின் கருத்துபற்றிய கேள்விக்கு, ஸ்டாலின் அரசியல் பாடம் படிக்காதவர்.அதனால், அப்படிப் பேசுகிறார் என்றார்.

stalin admk Os Manian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe